இஸ்ரேல் ராணுவம் அதிரடி தாக்குதல்

Date:

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவ வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் அமைப்பு ஆட்சி செய்கிறது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது. ஹமாஸ் அமைப்பை போன்று மேலும் சில ஆயுதமேந்திய குழுக்கள் காசா முனை, மேற்குகரையில் செயல்பட்டு வருகின்றன. அதேவேளை பாலஸ்தீனத்திற்கு மேற்கு கரையில் முகமது அப்பாஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

மேற்குகரையின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பகுதிகளில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

இதனிடையே, இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்குகரையின் ஜெனின் நகரில் ஆயுதக்குழுவினர் பதுங்கி இருப்பதாக இஸ்ரேல் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலையடுத்து ஜெனின் நகர் மீது இஸ்ரேல் ராணுவம் இன்று ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது. முதலில் ஆயுதக்குழுவினர் பதுங்கி இருப்பதாக கூறப்படும் கட்டிடங்கள் மீது ஆளில்லா டிரோன் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.

பின்னர், இஸ்ரேல் ராணுவத்தினர் ஜெனின் நகருக்குள் நுழைந்தது. அப்போது அங்கு பதுங்கி இருந்த பாலஸ்தீனிய ஆயுதக்குழுவினர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேலிய பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்த நிலையில் இந்த தாக்குதலில் பாலஸ்தீனிய ஆயுதக்குழுவினர் 8 பேர் உயிரிழந்தனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் , பாலஸ்தீனிய ஆயுதக்குழுவுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை தொடர்ந்து நீடித்து வருவதால் ஜெனின் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....