8 ஆண்டுகளாக மறைத்து வைக்கப்பட்டு தாயாரின் செக்ஸ் அடிமையாக செயல்பட்ட வாலிபர்

Date:

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தை சேர்ந்தவர் ரூடி பரியாஸ் (25). இவரது தயார் ஜானி சந்தனா.

இவர் 2015-ல் தனது 17 வயதில் காணாமல் போனதாக ஜானி சந்தனா போலீசில் புகார் அளித்து உள்ளார்.

திடீரென 8 ஆண்டுகளுக்குப் பிறகு ரூடி வெளீயே வந்து உள்ளார்.

அப்போதுதான் ரூடி காணாமல் போகவில்லை என்றும், தனது தாயாரால் வீட்டிற்குள் அடைத்து வைக்கப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும் கூறி உள்ளார்.

ரூடி இன்னும் காணவில்லை என்று பிடிவாதமாக இருந்து அவரது தாயார் தொடர்ந்து போலீசாரை ஏமாற்றி வந்து உள்ளார்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஆர்வலர் குவானெல் எக்ஸ் கூறியதாவது:-

ரூடியின் தாயார் அவரை ரூடியின் தந்தை போல இருக்குமாறு வற்புறத்தி உள்ளார்.

ஒரு அடிமையைப் போல வாழ்ந்து வந்து உள்லார். இதனால் 2015-ல் ரூடி வீட்டை விட்டு ஓடிப்போய் பிறகு 2 நாட்களில் திரும்பி வந்திருக்கிறார்.

ஆனால் ரூடியின் தாயார் அவரிடம் இது குறித்து வெளியில் சொன்னால் சிறைக்குச் செல்ல நேரிடும் என்றும் கூறி அச்சுறுத்தியிருக்கிறார்.

ரூடியை அவரது தாயார் படுக்கையில் தனது அருகில் படுக்க வைத்து அப்பாவைபோல் செய்யவேண்டும் என வற்புறுத்தியுள்ளார்.

இது பிடிக்காமல், தப்பிப்பதற்காக பரியாஸ் படுக்கைக்கு அடியில் ஒளிந்து கொண்டிருந்தாலும், தாயார் ஜேனி, ரூடியை அழைத்து தனது அருகே படுக்க வைத்து கொள்வார்.

மேலும் ரூடிக்கு போதை மருந்துகளும் அளித்திருக்கிறார். இதனால் பயந்து போலீசை நாடாமல் இருந்துள்ளார்.

ரூடியை ஒரு சிறந்த போதை மறுவாழ்வு இல்லத்திற்கும், நல்ல மனநல காப்பகத்திற்கும் கொண்டு செல்ல வேண்டும்.

ரூடி கடுமையாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார் இவ்வாறு ஆர்வலர் குவானெல் தெரிவித்திருக்கிறார்.

இவ்வளவு கொடுமைகளுக்கு பிறகும், தனது தாயார் சிறைக்கு செல்வதை பரியாஸ் விரும்பவில்லை என கூறப்படுகிறது.

அவரது தாயார் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் கூற்றுக்களை போலீசார் மறுத்துள்ளனர்.

 

 

 

 

 

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....