இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை முறியடித்த பென் ஸ்டோக்ஸ்…!

Date:

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷ்ஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் தோல்வியை சந்தித்த இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் இந்த தொடரில் பின்தங்கி இருந்தது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த ஜூலை-6 ஆம் திகதி துவங்கி நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 263 ரன்களையும், இங்கிலாந்து அணி 237 ரன்களையும் குவித்தது.

பின்னர் 26 ரன்கள் முன்னிலையுடன் தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது 224 ரன்களுக்கு ஆட்டமிழக்க இங்கிலாந்து அணிக்கு 251 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி ஏழு விக்கெட்டுகளை இழந்து 254 ரன்கள் குவித்து மூன்று விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.

இதன் மூலம் இங்கிலாந்து அணி இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. அதோடு இந்த போட்டியில் கேப்டனாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ் இந்திய அணியின் முன்னாள் டெஸ்ட் கேப்டனான மகேந்திர சிங் தோனியின் சாதனை ஒன்றினையும் தகர்த்துள்ளார்.

அந்த சாதனை என்னவெனில், இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 250 ரன்களுக்கு மேல் கொண்ட இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்து அதிக வெற்றிகளை பெற்ற அணியின் கேப்டனாக தோனி நான்கு வெற்றிகளுடன் முதலிடத்தில் இருந்தார்.

ஆனால் இந்த போட்டியில் அடைந்த வெற்றியின் மூலம் ஐந்தாவது முறையாக இங்கிலாந்து அணி பென் ஸ்டோக்ஸ்-ஸின் தலைமையின் கீழ் 250 ரன்களுக்கு மேல் உள்ள இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்துள்ளது.

இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 250 ரன்களுக்கு மேல் உள்ள இலக்கை அதிகமுறை வெற்றிகரமாக சேசிங் செய்து வெற்றியை பெற்றுத்தந்த கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் புதிய சாதனையை படைத்துள்ளார்.

 

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....