ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்பு..!

Date:

ஐஸ்லாந்து தலைநகர் ரையாக்விக்கில் கடந்த 24 மணி நேரத்தில் 2,200 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐஸ்லாந்தின் வானிலை ஆய்வு ஆய்வு மையம் தரப்பில், “ரெய்க்யவிக் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 2,200 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.

இந்த நிலநடுக்கங்கள் நாட்டின் தென் பகுதியில் பரவலாக உணரப்பட்டுள்ளது. இதனால் எரிமலை சீற்றம் விரைவில் ஏற்படக்கூடும்.

இதில் பல நில நடுக்கங்கள் மிதமான ( ரிக்டர் அளவில் 4.1 ) அளவில் பதிவாகியுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நிலநடுக்கம் காரணமாக எரிமலையில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் நெருப்பு குழம்பு வெளியேறியது. இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

நெருப்பினால் புகை வெளியேறி அப்பகுதி முழுவதும் புகை மடலமான காட்சியளிக்கிறது.

இதற்கு முன்னர் ஏப்ரல் 2010 ஆம் ஆண்டு ஐஸ்லாந்தில் ஹே ஜப்ஜல்லாஜோகுல் எரிமலை வெடிப்பு காரணமாக 1,00,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இதனால் 1 கோடிக்கும் அதிகமான பயணிகள் பாதிக்கப்பட்டனர். 2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளிலும் இங்கு எரிமலை வெடிப்பு ஏற்பட்டது குறிப்பிடதக்கது.

 

 

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....