குழந்தைகளிடையே தட்டம்மை நோய்

Date:

இந்த நாட்களில் குழந்தைகளிடையே தட்டம்மை நோயின் தாக்கம் அதிகமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா, நேற்றைய நிலவரப்படி 12 சிறுவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

காய்ச்சல் மற்றும் சிவப்பு புள்ளிகள் இந்த நோயின் அறிகுறிகளில் என்றும், இந்த நோயின் ஆபத்துகள் குறித்து மக்கள் சரியாக அறிந்திருக்கவில்லை என்றும் மருத்துவர் கூறினார்.

இதேவேளை, கடந்த சில வருடங்களில் சிறுவர்களுக்கு புற்றுநோய் பாதிப்புகள் பதிவாகி வருவதாக தெரிவித்த மருத்துவர், ஒவ்வொரு வருடமும் 19 வயதுக்குட்பட்ட 900க்கும் அதிகமான சிறுவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுதவிர, ஆண்டுதோறும் சுமார் 100 குழந்தைகள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுவதாகவும், இது போன்ற பாதிப்புகள் அதிகரித்து வருவதாகவும் மருத்துவர் தெரிவித்தார்.

இவ்வாறான நிலைமைகளை எதிர்கொள்வதற்கு போசாக்கான உணவுகளை குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் எனவும், சிறுவர்கள் தொடர்ந்து விளையாடுவதை ஊக்குவிக்க வேண்டும் எனவும் தெரிவித்த வைத்தியர் தீபால் பெரேரா, குழந்தைகளை கையடக்கத்தொலைபேசியிலிருந்து விலக்கி வைப்பதே சிறந்தது எனவும் தெரிவித்தார்.

குழந்தைகளின் உணவில் எண்ணெய், சர்க்கரை போன்றவற்றை முடிந்தவரை பயன்படுத்தாமல் இருந்தால் நாளை ஆரோக்கியமான குழந்தைகள் சமூகத்தை உருவாக்கலாம் என்றும் மருத்துவர் கூறினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....