கீர்த்தி ஷெட்டிக்கு நட்சத்திர நடிகரின் மகனால் தொடர் தொல்லை…?

Date:

நடிகை கீர்த்தி ஷெட்டி தெலுங்கில் நாக சைதன்யாவுடன் இணைந்து சமீபத்தில் நடித்து வெளியான படம் கஸ்டடி.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் கடந்த மே மாதம் 12-ம் திகதி படம் வெளிவந்தது.

எனினும், அந்த படம் பெரிய அளவில் வசூலை குவிக்கவில்லை. இந்த நிலையில், நடிகை கீர்த்தி ஷெட்டிக்கு, நட்சத்திர நடிகரின் மகன் ஒருவர் தொடர்ச்சியாக தொல்லை அளித்து வருகிறார் என்று செய்திகள் கிளம்பின.

அந்த நபர் செல்ல கூடிய ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் வரும்படி கீர்த்தி ஷெட்டிக்கு தொடர்ச்சியாக தொலைபேசி வழி அழைப்புகள் வந்து உள்ளன. அந்த நபர் விடாமல் பின்தொடர்ந்து உள்ளார்.

நடிகையுடன் நட்பு கொள்ள அவர் கடுமையாக முயற்சித்து வருகிறார். ஆனால், இதனை கீர்த்தி ஷெட்டி விரும்பவில்லை என்று கூறப்பட்டது.

அது யாராக இருக்க கூடும் என்று ரசிகர்கள் மத்தியில் யூகங்கள் பரவின. அதுபற்றிய மீம் ஒன்றும் வைரலானது.

இந்த செய்தி வைரலாக பரவியதும், அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் கீர்த்தி தனது சமூக வலைதளத்தில் விளக்கம் அளித்து உள்ளார்.

அதில், அனைத்து யூகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்து பதிலளித்து உள்ளார். அந்த பதிவில், தயவு செய்து கற்பனையாக இதுபோன்று விசயங்களை புனைய வேண்டாம்.

தவறான தகவலை பரப்பாமல் நிறுத்தி கொள்ளவும். இது ஓர் அடிப்படையற்ற புரளி என்பதற்காக, இதனை தவிர்த்து விட நினைத்தேன்.

ஆனால், இந்த புரளி பல மடங்காக வெடித்து, பரவி வருகிறது என்று தெரிவித்து உள்ளார்.

ஹிருத்திக் ரோஷனுடனான படத்தில் நடித்து திரை துறைக்கு அறிமுகம் ஆனார் கீர்த்தி ஷெட்டி. ஆனால், தெலுங்கில் உப்பென்னா என்ற அவரது அறிமுக படம் அவருக்கு ரசிகர்களிடையே பெயர் வாங்கி தந்தது.

அவர் நடிகர் ஜெயம் ரவியுடன் இணைந்து, ஜெனீ என்ற தமிழ் படத்தில் அடுத்து நடித்து வருகிறார்.

 

 

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....