வெளிநாட்டவர்கள் 7 பேருக்கு பத்தாண்டு கடூழிய சிறை!

Date:

போதைப்பொருள் குற்றம் நிரூபிக்கப்பட்ட, வெளிநாட்டவர்கள் 7 பேருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம், 10 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கடந்த சில வருடங்களில், காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்ட 2 வெவ்வேறு சுற்றிவளைப்புகளில், குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டதுடன், அவர்களுக்கு எதிராக மேல்நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அவர்களில் 5 பாகிஸ்தானியர்களும், 2 ஈரானியர்களும் அடங்குவதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி கடற்படை மற்றும் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, 45 கிலோ 654 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட ஈரானியர்கள் இருவருக்கும், ஐந்து பாகிஸ்தானியர்களுக்கும், கொழும்பு மேல் நீதிமன்றம் 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.

அத்துடன், 2016 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் திகதி ஒரு கிலோ 744 கிராம் கொக்கேய்னுடன் கைதுசெய்யப்பட்ட நைஜீரிய பிரஜை ஒருவருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை தண்டனை விதித்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....