தென் கொரியாவில் நிலவும் சீரற்ற வானிலையால் இதுவரையில் 22 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது நாளாக அங்கு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன் சுங்சியோங் மாகாணத்தில் உள்ள அணை நீர் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பலத்த மழையால் வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் மகிழுந்துகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லும் காணொளி காட்சிகள் வெளியாகியுள்ளக.
அத்துடன் மேலும் 14 பேர் காணாமல் போயுள்ளனர்.
ஆயிரக்கணக்கானோர் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலான உயிரிழப்புகள் வடக்கு ஜியோங்சாங் மாகாணத்தில் பதிவாகியுள்ளன,
மீட்புப் பணிகளில் இராணுவத்தையும் பயன்படுத்துமாறு அந்த நாட்டு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




