ஆப்கானிஸ்தான்- வங்கதேசம் 2வது டி- 20 டாஸ் வென்ற வங்கதேசம் அணி பந்து வீச்சு தேர்வு

Date:

ஆப்கானிஸ்தான் அணி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை ஆப்கானிஸ்தான் அணி கைப்பற்றியது.

அதன் பின்னர் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் இரு அணிகளும் மோதுகின்றன. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் வங்கதேசம் அணி வென்றது. இதன் மூலம் தொடரை 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதன் இரண்டாவது ஆட்டம் இன்று நடைபெறுகிறது.

தற்போது போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதனை வங்கதேசம் அணி வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 16 ரன்களில் விளையாடி வருகிறது. இப்போட்டியை வங்கதேசம் அணி வென்றால் 20 ஓவர் தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....