பிரபல ஆப்கானிஸ்தான் பாடகி பாகிஸ்தானில் சுட்டுக்கொலை

Date:

ஆப்கானிஸ்தானின் பிரபல பாடகி ஹசிபா நூரி (38).நேற்று பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் உள்ள குசாவில் ஒரு நிகழ்ச்சியில் அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் 2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் தலிபான்களிடம் இருந்து தப்பி பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்து இருந்தார்.

நூரியின் நண்பரான கோஸ்போ அஹ்மதி, அவர் இறந்த செய்தியை ஒரு சமூக ஊடக இடுகையில் உறுதிப்படுத்தி உள்ளார்.

ஹசிபா நூரியின் மரணம் பாகிஸ்தானில் உள்ள ஆப்கானிஸ்தான் அகதிகள் எதிர்கொள்ளும் கடுமையான ஆபத்தை உணர்த்துகிறது. சுமார் 14 லட்சம் பதிவு செய்யப்பட்ட அகதிகள் மற்றும் எண்ணற்ற ஆவணமற்ற அகதிகள் பாகிஸ்தானில் குடியேறி உள்ளனர்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....