அந்த இளம் பந்துவீச்சாளரை உலகக்கோப்பையில் தேர்வு செய்யாமல் ஆசிய விளையாட்டு அணியில் ஏன் சேர்த்துள்ளீர்கள் – ஆகாஷ் சோப்ரா

Date:

இந்தியாவில் வரும் அக்டோபர் -நவம்பர் மாதங்களில் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது.

அதே சமயத்தில் சீனாவில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.

உலகக்கோப்பை தொடருக்கு சீனியர் வீரர்கள் இடம் பெறுவார்கள் என்பதால் ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கு இளம் வீரர்களை உள்ளடக்கிய இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்த அணிக்கு ருதுராஜ் கெய்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிவம் துபே, திலக் வர்மா, ஜெய்ஸ்வால், ரிங்கு சிங் உள்ளிட்ட வீரர்கள் இடம் பெற்றுள்ளன.

இந்திய அணியில் தற்போது இடது கை வேகப்பந்து வீச்சாளராக இடம் பிடித்து வந்தவர் அர்ஷ்தீப் சிங். அவர் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் இடம் பெற்றுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியதாவது, அர்ஷ்தீப் பெயர் இந்த அணியில் (ஆசிய விளையாட்டு போட்டிகள்) இருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

அவரை ஒருநாள் போட்டிகளில் தேர்வுக்குழுவினர் கணக்கில் எடுத்துக் கொள்ளாதது ஆச்சரியமாகும். சொல்லப்போனால் அவரை வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரிலும் சேர்க்கவில்லை.

அதே போல ஆசிய கோப்பை தொடரிலும் அவரை தேர்வு செய்யாத நீங்கள் உலகக் கோப்பையில் இருந்தும் வெளியே வைத்துள்ளீர்கள்.

அந்தளவுக்கு என்ன நடந்தது? ஏனெனில் அர்ஷ்தீப் நீண்ட காலத்திற்கு 3 வகையான கிரிக்கெட்டில் அல்லது குறைந்தபட்சம் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அசத்தக்கூடிய திறமை கொண்டவர். ஆனால் தற்போது அவர் அணியில் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....