டி20 உலகக் கோப்பையில் ஆதிக்கம் செலுத்திய ஆப்கானிஸ்தான்

Date:

டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று நடந்த சூப்பர் 8 சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் அணிகள் மோதின.

முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 115 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய வங்காளதேச அணி 17.5 ஓவரில் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றதுடன் அரையிறுதிக்கு முன்னேறியது.

ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான், நவீன் உல் ஹக் 4 விக்கெட் வீழ்த்தினர். அரையிறுதியில் ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

இந்நிலையில், நடப்பு உலகக் கோப்பையில் அதிக ரன்கள் மற்றும் அதிக விக்கெட் எடுத்தவர்களின் பட்டியலில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் முன்னிலையில் உள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் குர்பாஸ் 7 போட்டிகளில் 281 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். இந்த அணியின் பரூக்கு 7 போட்டிகளில் 16 விக்கெட் வீழ்த்தி முதலிடத்தில் நீடிக்கிறார்.

மேலும் முன்னணி அணியான நியூசிலாந்தை லீக் சுற்றிலும், சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தி அசத்தியுள்ளது.

இதன்மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்து சாதனை படைத்துள்ளது. இதையடுத்து, ரசிகர்கள் ஆப்கானிஸ்தான் அணிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும், ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கானுக்கு அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி அமீர் கான் வீடியோ காலில் வாழ்த்து சொல்லியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் இந்த வெற்றி வங்காளதேச மக்களின் இதயத்தை மட்டுமின்றி, ஆஸ்திரேலியா ரசிகர்களின் இதயத்தையும் சுக்குநூறாக நொறுக்கிவிட்டது என்றால் மிகையல்ல.

டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக முன்னேறியதை அந்த நாட்டு மக்கள் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பதவி விலகினார் மஹேல!

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசக பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து மஹேல ஜயவர்தன...

ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கானை வீடியோ காலில் பாராட்டிய தலிபான் அமைச்சர்

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடந்த சூப்பர் 8 சுற்றின் கடைசி...

டி20 போட்டிகளில் அதிக முறை 4 விக்கெட்: ரஷித் கான் புதிய சாதனை

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடந்த சூப்பர் 8 சுற்றின் கடைசி...

மகளிர் ஆசிய கோப்பை: இந்தியா, பாகிஸ்தான் ஜூலை 19ம் தேதி மோதல்

மகளிர் டி20 ஆசிய கோப்பை தொடர் இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறுகிறது. ஜூலை...