குஜராத் அணியின் சவாலை சமாளிக்குமா டெல்லி? 32-வது லீக் போட்டியில் இன்று மோதல்

Date:

முன்னாள் சாம்பியனான குஜராத் அணி இதுவரை 6 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி (மும்பை, ஐதராபாத், ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக), 3 தோல்வி (சென்னை, பஞ்சாப், லக்னோ அணிகளிடம்) கண்டுள்ளது. முந்தைய ஆட்டத்தில் ராஜஸ்தான் நிர்ணயித்த 197 ரன் இலக்கை கடைசி பந்தில் எட்டிப்பிடித்தது.

அந்த ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரர்களான சுப்மன் கில், சாய் சுதர்சன் வலுவான அடித்தளம் அமைத்தனர். ஆனால் மிடில் வரிசை பேட்டிங்கில் தடுமாற்றம் இருக்கிறது. அதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானதாகும். பந்து வீச்சில் ரஷித் கான், மொகித் ஷர்மா, உமேஷ் யாதவ், நூர் அகமது வலுசேர்க்கிறார்கள்.

டெல்லி அணி தனது முதல் 2 ஆட்டங்களில் பஞ்சாப், ராஜஸ்தான் அணிகளிடம் தோற்றது. 3-வது ஆட்டத்தில் சென்னையை வீழ்த்தியது. அடுத்த 2 ஆட்டங்களில் கொல்கத்தா, மும்பையிடம் பணிந்தது. கடந்த ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவை எளிதில் தோற்கடித்தது.

டெல்லி அணியில் பேட்டிங்கில் கேப்டன் ரிஷப் பண்ட், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், டேவிட் வார்னர், பிரித்வி ஷாவும், பந்து வீச்சில் கலீல் அகமது, குல்தீப் யாதவ், முகேஷ் குமார், இஷாந்த் ஷர்மாவும் நல்ல நிலையில் உள்ளனர். மூன்று துறைகளிலும் அந்த அணி நிலையான திறனை வெளிப்படுத்த வேண்டியது முக்கியமானதாகும். கடந்த ஆட்டத்தில் கிடைத்த வெற்றி உத்வேகத்தை தொடர இரு அணிகளும் தீவிரம் காட்டுகிறார்கள். இருப்பினும் உள்ளூர் அனுகூலத்துடன் களம் காணும் குஜராத்தை சமாளிப்பது டெல்லி அணிக்கு சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐபிஎல் 2024: 2-வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ராஜஸ்தான்

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்...

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட...

நடப்பு ஐபிஎல் தொடரில் 1,125 சிக்சர்கள்: கடந்த ஆண்டு சாதனை முறியடிப்பு

ஐ.பி.எல் தொடரின் ஒவ்வொரு சீசனிலும் சிக்சர்களின் எண்ணிக்கை உயர்ந்தவாறு இருக்கிறது. தற்போது...