சோகத்தை உள்ளே வைத்து கொண்டு வெளியே மட்டும்தான் பாண்ட்யா சிரிக்கிறார் – கெவின் பீட்டர்சன்

Date:

ஐ.பி.எல். 2024 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை அணிக்கு ஐ.பி.எல். தொடரில் பல கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்ட்யா மும்பை அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.இதனை மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

போட்டி நடைபெறும்போது ஹர்திக் பாண்ட்யாவுக்கு எதிராக ரசிகர்கள் கோஷம் எழுப்பினர். தற்போதும் எழுப்பி வருகின்றனர். அணி நிர்வாகம், ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோரால் சரி செய்ய முடியவில்லை. இது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்துவதாக உள்ளது.

நடப்பு ஐ.பி.எல். தொடரில் ஹர்திக் பாண்ட்யா தலைமையில் விளையாடி வரும் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் 3 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியை தழுவியது. ஆனால் அதற்கு அடுத்த 2 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வெற்றி பாதைக்கு அணி திரும்பியது. ஆனால் மீண்டும் நேற்று நடைபெற்ற சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மும்பை தோல்வியடைந்தது. அந்த தோல்விக்கு கடைசி ஓவரில் டோனிக்கு எதிராக பாண்டியா 20 ரன்கள் கொடுத்ததே முக்கிய காரணமாக அமைந்தது என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

இந்நிலையில், ஹர்திக் பாண்ட்யா கேப்டன்சி குறித்து இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர் “ஹர்திக் பாண்ட்யா டாஸ் போடும்போதும் பேட்டிங் செய்ய வரும்போதும் அளவுக்கு அதிகமாக சிரித்த முகத்துடன் இருக்கிறார். மகிழ்ச்சியாக இருப்பதுபோல தன்னை காட்டிக்கொள்ள முயல்கிறார் ஆனால், அவர் உண்மையில் வருத்தத்தில் உள்ளார். ரசிகர்கள் BOO செய்து முழக்கமிடுவது போன்ற விஷயங்கள், ஹர்திக்கை காயப்படுத்தியுள்ளது. இது அவரது கேப்டன்சியை பாதிக்கிறது. அவரது இடத்தில் நானும் இருந்திருக்கிறேன். இது மிகவும் கடினமான சூழல்” என்று தெரிவித்துள்ளார்.

“ஹர்திக் பாண்ட்யாவுக்கு என்ன நடக்கிறது. அவருக்கு எதிர்ப்பு தெரிவித்த ரசிகர்கள் தற்போது முன்னாள் சி.எஸ்.கே கேப்டன் டோனி பாண்ட்யாவை அடித்து நொறுக்குவதை பார்த்து மகிழ்ச்சியடைகிறார்கள். அது அவருக்கு வலியை கொடுக்கும். ஏனெனில் இந்திய வீரரான அவர் உணர்ச்சிவசப்படுகிறார். எனவே இப்படி நடக்கும் போது அது அவரை பாதிக்கிறது. இது நடக்காமல் இருக்க ஏதாவது நடக்க வேண்டும்” என்று கூறினார்.

அத்துடன் வேகப்பந்து வீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கும் போது உடனடியாக ஸ்பின்னர்களை பயன்படுத்தி எதிரணியை அட்டாக் செய்யும் யுக்தியை கேப்டனாக பாண்ட்யா பின்பற்றவில்லை என பீட்டர்சன் விமர்சித்தார். அந்த வகையில் மிகப்பெரிய அழுத்தத்திற்குள் தவிக்கும் பாண்ட்யா அடுத்து வரும் போட்டிகளில் மும்பையை வெற்றி பாதைக்கு கொண்டு வர வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்” என்று அவர் தெரிவித்தார்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

முதல் 7இல் வெறும் 1.. அடுத்த 7இல் 6.. கம்பேக்கில் மேஜிக் நிகழ்த்திய ஆர்சிபி.. வேறு யாரும் செய்யாத 2 சாதனை

உச்சக்கட்டத்தை தொட்டுள்ள ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 68வது லீக்...

கங்குவா தீபாவளிக்கு வெளியாகிறதா?

தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' என்ற படத்தில்...