# Tags

விபத்தில் சிக்கிய அம்பாறை மாவட்ட முன்னாள் எம்.பி

அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இன்று காலை 6.45 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த அவர், பொத்துவில் அக்கரைப்பற்று பிரதான வீதியில் சென்ற பஸ் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானார்.. இந்நிலையில் குறித்த விபத்தில் படுகாயமடைந்த அவர் கல்முனை ஆதார வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அம்பாறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர் கடலில் மூழ்கி உயிரிழப்பு !

ஒலுவில் பல்கலைக்கழக வளாகத்திற்கு பின்புறமுள்ள கரையோரப் பகுதியில் மாணவர்கள் குழுவுடன் கடலில் குளித்த தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒருவர்உயிரிழந்துள்ளார். அப்பகுதி மக்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக போலீசார் தெரிவித்தனர். எனினும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்த மாணவர் ஒலுவில் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கொடூரமாக தாக்கிய ஆசிரியருக்கு எதிராக சட்டநடவடிக்கை !

ஆசிரியர் ஒருவர் கடுமையாகத் தாக்கியதால் முழங்கால் ‘சில்’ பகுதி பாதிப்புக்குள்ளானதாகக் கூறப்படும் மாணவர் ஒருவருக்கு நியாயம் கோரி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட பாலமுனை அல் ஹிக்மா பாடசாலையில் தரம் 09இல் கற்கும் ஐ. அப்துல் ஹாதிக் எனும் மாணவனே இவ்வாறு ஆசியரால் தாக்கப்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை – குறித்த பாடசாலையில் வைத்து ஐ.எம். பஹாரி எனும் ஆசிரியர் தனக்கு […]