# Tags

ஓடும் பஸ்ஸில் யுவதியிடம் சில்மிஷம் – பொலிஸ் பரிசோதகர் கைது

பஸ்ஸில் பயணித்த யுவதி ஒருவரிடம் சில்மிஷம் செய்த குற்றச்சாட்டின் பேரில் தலைமை பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர். பல்வேறு முறைப்பாடுகள் பிரிவுகளின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றும் 54 வயதுடைய தலைமை பொலிஸ் பரிசோதகரான இவர் களுத்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலையமொன்றைச் சேர்ந்தவராவார். அம்பலாங்கொடை நோக்கிப் பயணித்த பஸ்ஸில் பயணித்த பயிற்சி தாதி ஒருவருக்கு அருகில் நின்றிருந்த குறித்த பொலிஸ் பரிசோதகர் அநாகரிகமான முறையில் நடந்துகொண்டுள்ளதாகவும் இதனையடுத்து குறித்த பஸ்ஸில் சென்ற பயணிகள் […]

மூன்று கொலை சம்பவங்கள் பதிவு

நாட்டின் பல பகுதிகளில் மூன்று கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ரத்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓவகந்த பகுதியில் இரண்டு பெண்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். காதல் உறவில் ஏற்பட்ட தகராறு காரணமாக நேற்று (26) இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இறந்தவர் தனது வீட்டில் இருந்தபோது, ​​அவரது தாயாரின் இளைய சகோதரர் வீட்டிற்கு வந்து இறந்தவரையும் அவரது தாயாரையும் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார். ரத்கம பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய […]