தேசிய பங்களிப்பு ஓய்வூதிய நிதியத்தை ஸ்தாபித்தல்
அரச ஊழியர்களின் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அவர்கள் இளைப்பாறிய காலத்தில் அனுகூலங்களுடன் கூடிய ஓய்வூதியத்தை வழங்குவதற்கும், இளைப்பாறிய ஊழியர்கள் நாட்டுக்கு சுமையின்றி தமது ஓய்வு காலத்தைக் கழிப்பதற்கும் பொருத்தமான சூழலை உறுதிப்படுத்துவதற்கும் இயலுமாகும் வகையில் தேசிய பங்களிப்பு ஓய்வூதிய நிதியம் எனும் பெயரிலான நிதியத்தைத் தாபிப்பது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, அரச ஊழியர் ஒருவர் அரச சேவையில் இணைந்துகொண்ட பின்னர் அவருடைய அடிப்படைச் சம்பளத்தின் 8% வீதமும், தொழில் வழங்குநரின் பங்களிப்பாக 12% வீதமும் மாதாந்தம் உத்தேச நிதியத்திற்கு […]