# Tags

பொலிஸாருக்கு எதிராக 1,521 மனுக்கள்

அடிப்படை உரிமை மீறல்கள் தொடர்பாக பல்வேறு தரப்பினரால் பொலிஸ் திணைக்களத்திற்கு எதிராக சுமார் 1,521 அடிப்படை உரிமை மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார். அர்ஜுன பராக்கிரமவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு நேற்று உயர்நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு அழைக்கப்பட்ட போதே சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டத்தரணி ஷமிந்த விக்ரம இந்த விடயத்தினை குறிப்பிட்டார்.