# Tags

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி…!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 2 விக்கெட் வித்தியாசத்தில் நியூலாந்து வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் அடிப்படையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. ஜூன் 7 ஆம் திகதி லண்டனில் தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அவுஸ்ரேலியாவை இந்தியா எதிர்கொள்கிறது.

அவுஸ்ரேலியாவுக்கு எதிராக இந்தியா தொடரை வெல்லுமா? ; உலக டெஸ்ட் சாம்பியன் இறுதி போட்டிக்கு இந்தியா நுழையுமா..?

அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் தொடரில் நாக்பூரில் நடந்த முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 132 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது. இந்தூரில் நடந்த மூன்றாவது டெஸ்டில் அவுஸ்ரேலியா 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. மூன்று போட்டிகள் முடிந்த நிலையில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. இந்தியா-அவுஸ்ரேலியா […]