பரீட்சை நடைபெறாது..! அரச சேவையில் உள்ள பட்டதாரிகளுக்கான விசேட அறிவிப்பு
அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை ஆசிரியர் வெற்றிடங்களுக்காக இணைத்துக்கொள்வதற்கான போட்டிப்பரீட்சை மறு அறிவித்தல் வரை பிற்போடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் 25ஆம் திகதி நாட்டின் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலமான ஆசிரியர் வெற்றிடங்களுக்காக இந்தப் பரீட்சை நடைபெறவிருந்தது. எவ்வாறாயினும், உயர் நீதிமன்றின் உத்தரவுக்கு அமைவாக குறித்த தினத்தில் பரீட்சை நடைபெற மாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். அத்தோடு, எதிர்வரும் காலங்களில் உயர் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புக்கு […]