# Tags

பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட T20 தொடர் ஷார்ஜாவில் நடைபெற்று வருகின்றது. இதில் முதலாவது போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்று அசத்தியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2வது போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி கடந்த ஆட்டத்தை போல் ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் ஓட்டங்களை எடுக்க தடுமாறியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சைம் அயூப் 0 ஓட்டம் முகமது […]

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவாகி இருப்பதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள தஜிகிஸ்தான் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. தொடர்ச்சியாக ஏற்படும் நிலநடுக்கங்கள் அங்குள்ள மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தானின் பைசாபாத்தில் இருந்து தென்கிழக்கே 82 கிமீ தொலைவில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் (NCS) தெரிவித்துள்ளது. இது குறித்து தேசிய நிலநடுக்கவியல் மையம் மேலும் தெரிவிக்கையில் , ஆப்கானிஸ்தானின் பைசாபாத்தில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.0 ஆக பெப்ரவரி 28-ம் திகதி ஏற்பட்டுள்ளது, 23:47 நிமிடத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதன் நீளம்: 71.15 ஆகும், நிலநடுக்கம் 10 கிமீ ஆழத்தில் தாக்கியது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த […]