இத்தாலியில் படகு கவிழ்ந்து 59 அகதிகள் உயிரிழப்பு
ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் வறுமை , உள்நாட்டு போர் உள்ளிட்ட காரணங்களால் இத்தாலி உள்ளிட்ட நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். கடலில் ஆபத்தான முறையில் செல்லும் அவர்கள் அடிக்கடி விபத்துகளையும் சந்தித்து வருகின்றனர். அந்தவகையில் 100-க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க அகதிகளுடன் சென்று கொண்டிருந்த படகு ஒன்று இத்தாலியின் கலாபிரியா கடற்பகுதியில் சென்றபோது திடீரென கடலில் மூழ்கியது. இதில், 59-க்கும் மேற்பட்ட அகதிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். பலர் மாயமாகியுள்ளனர். இதுவரை 59 உடல்களை மீட்டுள்ள இத்தாலி […]