# Tags

உலக மகிழ்ச்சி அறிக்கையில் இலங்ககை முன்னேறியுள்ளது!

உலக மகிழ்ச்சி அறிக்கையில் இலங்கை 15 இடங்கள் முன்னேறியுள்ளது, உலகளவில் குடிமக்கள் எவ்வளவு திருப்தியாக இருக்கிறார்கள் என்பது குறித்த வருடாந்திர கணக்கெடுப்பில் 112வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த ஆண்டு அறிக்கையின் பதிப்பில் கணக்கெடுக்கப்பட்ட 137 நாடுகளில் 10க்கு 4.4 மதிப்பெண்களுடன் இலங்கை 112வது இடத்தில் உள்ளது. இலங்கையின் முன்னோடியில்லாத பொருளாதார நெருக்கடியின் போது 2022 இல் கணக்கெடுக்கப்பட்ட 146 நாடுகளில் தீவு நாடு 127 வது இடத்தைப் பிடித்தது. இலங்கை கடந்த ஆண்டு கடுமையான பொருளாதார, நிதி […]

இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம்!

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதிக்கான அனுமதி கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினத்தை விடவும் இன்று வலுவாகியுள்ளது. நேற்றைய தினம் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் கொள்வனவு பெறுமதி 331 ரூபா 71 சதமாக காணப்பட்டதுடன், அதன் இன்றைய பெறுமதி 316 ரூபா 84 சதமாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. மேலும், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் விற்பனை பெறுமதி நேற்றைய தினம் 349 ரூபா […]

இலங்கைக்கு முதல் கட்டமாக 330 மில்லியன் அமெரிக்க டொலர்

நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு உதவியளிக்க சர்வதேச நிதியத்தின் நிறைவேற்றுக்குழு அங்கீகாரம் அளித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியம், சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் பலதரப்பு நிறுவனங்களிடமிருந்து 7 பில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான நிதியுதவியை இலங்கை பெறவுள்ளது. இதற்கமைய, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலரை இலங்கை பெறும். 48 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்ட கடன்வசதியின் கீழ் இலங்கைக்கு குறித்த தொகை வழங்கப்படும். இந்த மாத […]

நாட்டில் 40 இலட்சம் குடும்பங்களுக்கு நேர்ந்துள்ள நிலை

தாம் பெரும் வருமானத்தில் உணவுத்தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் ஜனவரி மாத இறுதிக்குள் 82 சதவீத இலங்கைக் குடும்பங்கள் வாழ்வாதாரத்திற்கான வேறு வழிகளைக் கடைப்பிடித்துள்ளதாக உலக உணவுத் திட்டத்தின் சமீபத்திய ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது இலங்கையில் உள்ள 48 வீதமான குடும்பங்கள் நிதி நிறுவனம் அல்லது கடனாளிகளிடமிருந்து கடன் பெற்றுள்ளனர் அல்லது தமது குடும்பத்திற்கு உணவைப் பெறுவதற்காக தங்க ஆபரணங்களை அடகு வைத்து பணத்தைக் பெற்றுள்ளனர் என்று அந்த அறிக்கை கூறுகிறது. இலங்கையில் 43 வீதமான […]

அமைச்சர் டக்ளஸ் அதிரடி அறிவிப்பு!

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களுக்கு ஒரு நிமிடம் கூட மீன்பிடிக்க அனுமதி கிடையாது, பாஸ் நடைமுறையும் இல்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்ட வட்டமாக தெரிவித்தார். வடமராட்சி வடக்கு மற்றும் கிழக்கு கடற்றொழிலாளர்களுடன் கடற்றொழில் அமைச்சர் நேற்று கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார். இதன்போது, மீனவர்களது பிரசினை தொடர்பில் ஆராய்ந்த போதே இவ்வாறு தெரிவித்தார். முதற்கட்டமாக இத்திய மீனவர்களது இழுவைப் படகு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இதன் போது இலங்கை கடற்பரப்பில் ஒரு நிமிடம் கூட மீன்பிடிக்க அனுமதி கிடையாது, […]

இந்திய 12 மீனவர்கள் விடுதலை !

நாகை, மீனவர்கள் 12 பேர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர். குறித்த மீனவர்கள் சென்ற படகு பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 12 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 12 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கை பருத்தித்துறை நீதிமன்ற நிபந்தனைகளுடன் 12 பேரையும் விடுதலை செய்துள்ளது. விடுதலை செய்யப்பட்டுள்ள 12 மீனவர்களும் ஓரிரு நாட்களில் சொந்த ஊர் […]

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி!

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளின்படி இன்று (17) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 332.06 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 351.51 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

நியூசிலாந்து அணி 2 விக்கட்டுக்களை இழந்து 155 ஓட்டங்கள்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. வெலிங்கடனில் நடைபெற்றுவரும் குறித்த போட்டியில் முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் நியூசிலாந்து அணி 2 விக்கட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. சீரற்ற வானிலை காரணமாக இன்றைய நாளில் 48 ஓவர்கள் மாத்திரமே வீசப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது. நியூசிலாந்து அணி சார்பில் டெவோன் கொன்வே 78 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்ததோடு, கேன் வில்லியம்சன் ஆட்டமிழக்காமல் 26 ஓட்டங்களுடனும் ஹென்ரி நிக்கோலஸ் 18 ஓட்டங்களுடனும் களத்தில் […]

இலங்கைக்கு எதிராக 197 நாடுகள் வாக்களிப்பு

இலங்கைக்கு எதிரான சர்வதேச கால்பந்து தடைக்கு ஆதரவாக 197 நாடுகள் வாக்களித்துள்ளன. ருவாண்டாவின் கிகாலி நகரில் நடைபெற்ற உலக கால்பந்து சம்மேளனத்தின் பொதுச் சபையில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 208 நாடுகள் கலந்து கொண்ட இந்த பொதுச் சபையில் இலங்கைக்கு சர்வதேச கால்பந்து தடை விதிக்க 197 நாடுகள் ஆதரவாக வாக்களித்திருந்தன. விளையாட்டு அமைச்சின் முறையற்ற செல்வாக்கு, விளையாட்டு சுதந்திரத்தை மீறுதல், தன்னிச்சையாக புதிய விதிமுறைகளை விதித்தல் போன்ற காரணங்களால் பல நாடுகள் இலங்கைக்கு […]

2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆரம்பம்

நியூசிலாந்துக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது. மழை காரணமாக போட்டியை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதேவேளை, இன்றைய போட்டிக்கு நிரோஷன் திக்வெல்லவுக்கு பதிலாக நிஷான் மதுஷ்க அழைக்கப்பட்டுள்ளார். நிஷான் மதுஷ்கவுக்கு இது முதலாவது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.