# Tags

வங்கிகள் குறித்த முக்கிய அறிவிப்பு !

மக்களுக்கு சேவை வழங்கும் வகையில் தலைமை அலுவலகம் உட்பட 265 கிளைகளின் அனைத்து பிரிவுகளும் வழமை போன்று இயங்கி வருவதாக இலங்கை வங்கியின் பொது முகாமையாளர் ரஸல் பொன்சேக்க அறிவித்துள்ளார். இத​வேளை, மக்கள் வங்கியின் 340 கிளைகளில் 272 கிளைகள், இன்று காலை 10.30 மணி வரை 75%க்கும் அதிகமான பணியாளர் வருகையுடன் முழுமையாகச் செயல்படுவதாக மக்கள் வங்கியின் CEO/GM கிளைவ் பொன்சேக்கா உறுதிப்படுத்தினார்.

வைத்தியசாலை, துறைமுகம், வங்கி உள்ளிட்ட பல துறையினர் நாடளாவியரீதியில்பணிப்புறக்கணிப்பில்

அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிராக இன்று (13) நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளில் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கை, வட்டி விகித அதிகரிப்பு, மின் கட்டண அதிகரிப்பு, அரசாங்க ஊழியர்களின் பிரச்சினைகள் போன்ற பல பிரச்சினைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தொழில்சார் நடவடிக்கைகளை இந்த வாரத்தில் மேலும் தீவிரப்படுத்துவதற்கு தொழிற்சங்க கூட்டு கடந்த தினம் தீர்மானித்திருந்தது. கடந்த வாரத்தில் பல துறைகளில் தொழிற்சங்க நடவடிக்கைகள் […]

நாடளாவிய ரீதியில் நாளை(01) ஒரு நாள் பணிப்பகிஷ்கரிப்பு – தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை

நியாயமற்ற வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளைய தினம்(01) நாடளாவிய ரீதியில் ஒரு நாள் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமது சங்கத்தினால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று(28) காலை 10 மணிக்கு விசேட மத்திய குழு கூடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர், வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். நாளைய தின(01) ஒரு நாள் தொழிற்சங்க நடவடிக்கையில் எரிபொருள், துறைமுகம், மின்சார தொழிற்சங்கங்களும் பங்கேற்கவுள்ளதாக துறைமுக இலங்கை […]