# Tags

பால்மா வின் விலையை குறைக்க தீர்மானம்!

ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது ஒரு பால் தேநீரின் விலை 100 ரூபாவாக உள்ளது. ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை 200 ரூபாவினாலும் 400 கிராம் ஒன்றின் விலை 80 ரூபாவினாலும் குறைக்கப்படும் என பால்மா இறக்குமதியாளர்கள் மன்றம் அறிவித்திருந்தது. இந்நிலையில், பால் தேநீரின் விலையும் குறைக்கப்படும் என […]

ஏப்ரலில் கியூ.ஆர். குறியீட்டு முறைமை நீக்கப்படாது – அமைச்சர் காஞ்சன விஜேசேகர

எரிபொருள் விநியோகத்திற்காக பயன்படுத்தப்பட்டு வரும் கியூ.ஆர். குறியீட்டு முறைமையை ஏப்ரல் 10ஆம் திகதி முதல் நீக்குவதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கியூ.ஆர். குறியீட்டு முறைமையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வரும் நடைமுறை ஏப்ரல் 10ஆம் திகதியுடன் இடை நிறுத்தப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இது தொடர்பில் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, […]