வறண்டு போன வெனிஸ் நகர கால்வாய்கள்; சேற்றில் கிடக்கும் படகுகள்*-*
இத்தாலியின் வெனிஸ் நகரம் கால்வாய்களுக்கும் படகு சவாரிகளுக்கும் பெயர்பெற்றது. ஆனால், தற்போது கோடைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், வெனிஸ் நகரின் கால்வாய்கள் தண்ணீர் இன்றி வறண்டு, படகுகள் அனைத்தும் சேற்றுக்குள் மூழ்கிக் கிடக்கின்றன. வெனிஸ் நகர கால்வாய்களில் நுழைந்து செல்லும் படகுகள் ரசிக்கத்தக்கவை. அந்நகரின் பெரும்பாலான போக்குவரத்து சேவை படகுகள் மூலமே இடம்பெற்ற நிலையில், தற்போது நகர மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெனிஸ் நகரை சுற்றியிருந்த 150 கால்வாய்கள் தண்ணீர் இன்றி வறண்டுபோனதால், மக்கள் தங்கள் […]