மருத்துவ ஆராய்ச்சிக்கான நவீன ஆய்வுகூடம்- விசேட குழு நியமனம்
ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால், மருத்துவ ஆராய்ச்சிக்கான நவீன ஆய்வுகூடம் அமைப்பது தொடர்பில் ஆராய்ந்து இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிப்பதற்கு குழுவொன்றை நியமிக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைக் குறிப்பிட்டுள்ளது.