# Tags

இலங்கைக்கு ஆதரவளிப்பதாக சீனா மீண்டும் உறுதி

சர்வதேச நாணய நிதியத்திற்கான இலங்கையின் கடன் விண்ணப்பத்திற்கு சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளதாக சீனா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பான ஆவணங்களை சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி நிதியமைச்சகத்திடம் கையளித்துள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார். இலங்கையில் குறுகிய கால கடன் வசதிகளை செலுத்துவதற்கு இரண்டு வருடங்கள் வழங்கப்படும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான விசாரணைக்கு பதிலளித்த சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் […]

சீனாவின் பதிலுக்கு அமையவே IMF கடன் வசதியை பெற முடியும் – நிதி அமைச்சு

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து(IMF) கிடைக்கும் கடன் வசதி, சீனாவின் பதிலிலே தங்கியுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயத்தில் சீனா சாதகமாக பதிலளிக்கும் என எதிர்பார்ப்பதாக அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சீனாவுடன் தொடர்ந்து கலந்துரையாடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பிக்கப்பட வேண்டிய அனைத்து ஆவணங்களும் தயார் நிலையிலுள்ளதாகவும் சீனாவிடம் இருந்து கிடைக்க வேண்டிய கடன் சான்றிதழ் கிடைத்தவுடன், சர்வதேச நாணய நிதியத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் நிதி அமைச்சு […]