ஆறிப்போன டீயை கொடுத்ததால் திட்டிய மாமியாரை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற மருமகள்
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள மலைக்குடிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு என்பவரது மனைவி பழனியம்மாள் (வயது 75). இவர்களுக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மகன் சுப்பிரமணிக்கு திருமணமாகி மனைவி கனகு (42) மற்றும் ஒரு மகனுடன் அதே ஊரில் வசித்து வருகிறார். கணவர் இறந்து விட்டதால், பழனியம்மாள் தனது மகனுடன் தங்கியுள்ளார். விவசாய கூலி வேலைக்கு செல்லும் சுப்பிரமணி நேற்று இரவு வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் மனைவி, […]