# Tags

விவசாயிகளுக்கு இலவசமாக டீசல் விநியோகம்!

சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட டீசல் இன்று அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. புத்தூர் கமநல சேவை பிரிவின் கீழ் பதிவு செய்த விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ஆறு லீற்றர் டீசல் விகிதம் வழங்கப்பட்டன. இதன்போது 630 விவசாயிகளுக்கு டீசல் வழங்கப்படுகின்றன. எவ்வாறாயினும், வழங்கப்பட்ட டீசல் விவசாயிகளுக்கு போதவில்லை எனவும் மேலதிகமாக டீசல் வழங்கப்பட வேண்டும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

பாகிஸ்தானில் இராணுவ வீரர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி !

பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகின்றது. எனவே ,உணவு தானியங்கள், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதனிடையே அரசாங்க ஊழியர்களின் சம்பளம் குறைப்பு, வெளிநாட்டு தூதரகங்களின் எண்ணிக்கை குறைப்பு, உளவு அமைப்புகளுக்கான நிதி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.இதனால் அரசாங்கம் நிர்வாகமே கடுமையாக ஸ்தம்பித்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானில் இராணுவ வீரர்களுக்கு உணவு வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள […]