# Tags

தாமதமின்றி தேர்தலை நடத்துமாறு செனட் சபையின் வௌியுறவு குழு வலியுறுத்தல்

தொடர்ந்தும் காலம் தாழ்த்தாமல் சுதந்திரமானதும் நீதியானதுமான உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசாங்கத்தை அமெரிக்க செனட் சபையின் வௌியுறவு குழு வலியுறுத்தியுள்ளது. இலங்கை மக்களின் குரலை நசுக்குவதற்கு மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியும் ஜனநாயக விரோத செயற்பாடு என ட்விட்டர் செய்தியூடாக வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனூடாக இலங்கை மக்களின் உரிமை மீறப்படுவதாக அமெரிக்க செனட் சபையின் வௌியுறவு குழு சுட்டிக்காட்டியுள்ளது.

ஊழியர்களை தொடர்ந்து ரோபோக்களை பணிநீக்கம் செய்யும் கூகுள்!

கூகுள் நிறுவன அலுவலக வளாகத்தில் கதவை திறப்பது, மேசைகளை துடைப்பது, குப்பைகளை அகற்றுவது, நாற்காலிகளை வரிசைப்படுத்துவது என அன்றாட பணிகளை செய்ய ரோபோக்கள் களமிறக்கப்பட்டன. இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு, சுமார் 100 ரோபோக்கள் வேலையை செய்து வருவதாக தகவல் வெளியாகியது. ரோபோக்கள் எந்த மாதிரியான வேலையை செய்ய வேண்டும் என்பது அதில் பொருத்தப்படும் கம்ப்யூட்டர்களில் பதிவேற்றப்பட்டு வடிவமைக்கப்பட்டன. இந்நிலையில், செலவைக் குறைப்பதற்காக உணவு விடுதி மேசைகளைச் சுத்தம் செய்யவும், குப்பைகளைத் தனித்தனியாகவும், கதவுகளைத் திறக்கவும் பயிற்சி பெற்ற […]