# Tags

12 இந்திய மீனவர்கள் கைது

எல்லை தாண்டி இலங்கை கடல் பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்த 12 இந்திய மீனவர்கள் 2 படகுகளுடன் நெடுந்தீவு அருகே கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் யாழ்பாணம் மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு நீரியல் வளத்துறை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். கைதானவர்கள் தமிழகம், புதுக்கோட்டை மாவட்டம், ஜகதாபட்டிணத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

கச்சதீவு பெருவிழா ஏற்பாடுகள் நிறைவு

கச்சதீவு அந்தோனியார் ஆலய பெருவிழா தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு பெற்றுள்ளது என யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ. சிவபாலசுந்தரன் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் ஊடகங்களுக்கு நேற்று (28) விடுத்த விசேட அறிவிப்பிலேயே இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவானது யாழ்ப்பாண மாவட்டச் செயலாளரது ஒருங்கிணைப்பில் யாழ்ப்பாண ஆயர் இல்லம், இலங்கை கடற்படை, நெடுந்தீவு பிரதேச செயலகம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட சகல திணைக்களங்களின் முழுமையான ஒத்துழைப்புடன் மார்ச் […]