# Tags

இரு விமானங்களில் வருகை தந்தவர்கள் யார்?

பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குடிவரவு குடியல்வு திணைக்களத்திற்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். கடந்த பெப்பிரவரி மாதம் 14 ஆம் திகதி “C 17 க்லோப்மாஸ்ட்டர்” என்ற இரு விமானங்களில் அமெரிக்க இராஜதந்திரிகள் நாட்டிற்கு வருகை தந்திருந்தனர். குறித்த அமெரிக்க இராஜதந்திரிகள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு கோரியே அவர் இந்த கடிதத்தினை அனுப்பி வைத்துள்ளார். இதற்கமைய, குறித்த இராஜதந்திரிகளின் வருகை தொடர்பில் 8 காரணங்களை முன்வைத்து பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இந்த கடிதத்தினை அனுப்பிவைத்துள்ளார். […]

பிரஜைகளின் தகவல் அறியும் உரிமை தொடர்பான தீர்ப்பை வரவேற்றுள்ள TISL

பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்து மற்றும் பொறுப்புக்கள் பற்றிய பிரகடனங்கள் தொடர்பாக கோரப்பட்ட தகவல்களை வெளியிடுமாறு தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் உத்தரவினை வலியுறுத்தும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்மானத்தை ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நிறுவனம் வரவேற்கிறது.   சாமர சம்பத் எதிர் இலங்கை பாராளுமன்றம் தொடர்பான விவகாரத்தில், 2010ம் ஆண்டு தொடக்கம் 2018ம் ஆண்டு வரையிலான காலப்பகுதிக்குள் தமது சொத்து மற்றும் பொறுப்புக்கள் குறித்த பிரகடனங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை பாராளுமன்றம் உடனடியாக வெளியிட […]