# Tags

பூமியை நெருங்கும் பேராபத்து !

விண்வெளியில் புதிதாக விண்கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஒலிம்பிக் போட்டிகளில் அமைக்கப்படும் நீச்சல் குளம் அளவுக்கு பெரியதாக அந்த விண்கல் உள்ளது. அந்த கல் நகரும் திசையை பொறுத்து 2046-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14-ம் திகதி குறித்த விண்கல் பூமி மீது மோத வாய்ப்பு இருப்பதாக அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் கணித்துள்ளதுடன், இது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையின் பணவீக்கம் வீழ்ச்சி

தேசிய நுகர்வோர் விலைக் சுட்டெண்ணின் அடிப்படையில் நாட்டின் ஆண்டு பணவீக்கம் பெப்ரவரி மாதத்தில் 50.6% ஆகக் குறைந்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரங்கள் துறை இதனை தெரிவித்துள்ளது. நாட்டின் ஆண்டு பணவீக்கம் கடந்த ஜனவரியில் 54.2% ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.