ஹைலெவல் வீதியூடாக பயணிக்கும் பஸ்களுக்கு புதிய விதிமுறை
ஹைலெவல் வீதியூடாக பயணிக்கும் அனைத்து பயணிகள் போக்குவரத்து பஸ்களும் நாளை மார்ச் முதலாம் திகதி முதல் மாக்கும்புர பல்நோக்கு பஸ்தரிப்பு நிலையத்தின் (Makumbura Multimodal Centre) ஊடாக பயணிக்க வேண்டுமென போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். குறித்த தீர்மானத்திற்கு மாறாக செயற்படும் பஸ்களின் அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஹைலெவல் வீதியூடாக மாக்கும்புரவில் உள்ள பல்நோக்கு பஸ்தரிப்பு நிலையத்திற்கு முன்பாக பஸ்கள் நிறுத்தி, பயணிகளை இறக்கி ஏற்றிச் செல்வதால், […]