# Tags

வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறி பண மோசடி!

வெளிநாட்டு வேலை வழங்குவதாக கூறி பணத்தை மோசடி செய்த இருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். குவைட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை ஏமாற்றிய பல்லம பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் மருதானை பகுதியில் வைத்து புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. குறித்த சந்தேக நபர், கம்பளை பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணொருவருக்கு குவைட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி 4 இலட்சத்து 50,000 […]

NPP மீதான தாக்குதலுக்கு சஜித் கண்டனம்!

தேசிய மக்கள் சக்தி போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவினூடாக எதிர்க்கட்சித் தலைவர் இத்தாக்குதலுக்கு தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். தேர்தலை ஒத்திவைக்கும் சதிக்கு எதிராக ´கொழும்பிற்கு எதிர்ப்பு´ என்ற தலைப்பில் தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தின் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை தாக்குதல் நடத்தப்பட்டது. அங்கு காயமடைந்த சுமார் 20 ஆர்ப்பாட்டக்காரர்கள் தற்போது கொழும்பு தேசிய […]