# Tags

மஹிந்த தலைமையில் விசேட கலந்துரையாடல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று கொழும்பில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.   பொருளாதார நெருக்கடி, வரவிருக்கும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் மற்றும் கட்சிக்கு முன்னோக்கி செல்லும் வழி ஆகியவற்றில் பொதுஜன பெரமுனவின் எவ்வாறு உதவ முடியும் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

அனுர உண்மையான டீல்காரர்

வசந்த முதலிகே விளக்கமறியலில் வைக்கப்பட்ட போதும் பாராளுமன்றத்திற்கு தீவைக்கச் சொன்ன லால் காந்தவிடமும் ஹதுன்நெத்தியிடமும் பொலிஸில் வாக்குமூலம் கூட பெறப்படவில்லை. இது அனுரவின் டீல், இது எப்படி நடந்தது என முடிந்தால் அனுர பதில் சொல்லட்டும் என ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். திஸ்ஸமஹாராம தொகுதி மகளிர் தொகுதி கூட்டத்தில் உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிடுகையில், 2009 அல்லது 2010 இல் திஸ்ஸமஹாராமவில் நடைபெற்ற பிரதான கூட்டத்தில் உரை நிகழ்த்த வந்தேன். அன்றும் நான் ஜே.வி.பி பற்றிப் பேசினோம். […]