# Tags

4 கோடி ரூபா பணம் மோசடி !

தனியார் நிறுவனமொன்றில் சுமார் 4 கோடி ரூபாவை மோசடி செய்த சம்பவம் தொடர்பில் கோட்டை பகுதியில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசேட புலனாய்வு பிரிவின் அதிகாரிகளினால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. சந்தேக நபர் குறித்த நிறுவனத்தின் ஊழியராக செயற்பட்டு உண்டியல்களை மாற்றி மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 34 வயதான மொரட்டுவ, மொல்பே பகுதியைச் சேர்ந்தவர் எனவும், அவர் இன்று (09) மலையக நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.