# Tags

பாடசாலை மாணவன் திடீர் மரணம்!

பாணந்துறை பிரதேசத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் இன்று பிற்பகல் திடீரென உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். களுத்துறை வடக்கில் வசிக்கும் 16 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த மாணவன் நண்பர்கள் குழுவுடன் விளையாடிக் கொண்டிருந்த போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பாடசாலை மாணவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனை இன்று […]

ஶ்ரீ ரங்கா கைது !

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா கைது செய்யப்பட்டுள்ளார். களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 2011ஆம் ஆண்டு வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுத்த குற்றச்சாட்டு தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தந்தையை கொலை செய்த மகன்!

தாக்குதலில் படுகாயமடைந்த நபர் ஒருவர் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். குறித்த மரணம் நேற்று (15) இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. கடந்த 14ம் திகதி இரவு, சம்பந்தப்பட்ட நபர் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறு செய்துள்ளார். அப்போது அவர் தனது மனைவியை இரும்பு கம்பியால் தாக்க முயன்றார். தாக்குதலில் இருந்து தாயை காப்பாற்ற இறந்தவரின் மகனும் மகளும் குறுக்கிட்டுள்ளனர், அப்போது மகன் இரும்பு கம்பியை பிடித்து தந்தையின் தலையில் தாக்கியுள்ளார். காயமடைந்த […]

பிரதான பாதுகாப்பு அதிகாரி மீது தாக்குதல்!

பண்டாரகம பிரதேச சபையின் பிரதான பாதுகாப்பு அதிகாரி மீது நான்கு பேர் கொண்ட குழு தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் நேற்று (12) மாலை இடம்பெற்றுள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலுக்கு உள்ளான பிரதான பாதுகாப்பு அதிகாரி சிகிச்சைக்காக பண்டாரகம மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பண்டாரகம பொதுச் சந்தைக் கட்டிடத்தில் அமைந்துள்ள பிரதேச சபை அலுவலகத்தின் நுழைவாயிலை அடைத்து நிறுத்தப்பட்டிருந்த காரை அகற்றுமாறு பாதுகாப்பு அதிகாரி காரில் இருந்தவர்களிடம் அறிவித்துள்ளார். ஆனால், அவர்கள் அதை புறக்கணித்ததால், வீதி […]

வைத்தியசாலை, துறைமுகம், வங்கி உள்ளிட்ட பல துறையினர் நாடளாவியரீதியில்பணிப்புறக்கணிப்பில்

அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிராக இன்று (13) நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளில் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கை, வட்டி விகித அதிகரிப்பு, மின் கட்டண அதிகரிப்பு, அரசாங்க ஊழியர்களின் பிரச்சினைகள் போன்ற பல பிரச்சினைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தொழில்சார் நடவடிக்கைகளை இந்த வாரத்தில் மேலும் தீவிரப்படுத்துவதற்கு தொழிற்சங்க கூட்டு கடந்த தினம் தீர்மானித்திருந்தது. கடந்த வாரத்தில் பல துறைகளில் தொழிற்சங்க நடவடிக்கைகள் […]

ஈரானில் சிறுமிகள் பாடசாலைக்கு செல்வதை தடுக்க விஷம் வைத்து கொல்ல முயற்சி

ஈரான் நாட்டில் சிறுமிகள் பாடசாலைக்கு செல்வதை தடுப்பதற்காக மர்மநபர்கள் சிறுமிகளுக்கு விஷம் வைத்து கொல்ல முயற்சி செய்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை துணை அமைச்சர் யூனுஸ் பனாஹி கூறியுள்ளார். ஈரான் தலைநகர் டெஹ்ரான் அருகே கோம் என்ற நகரத்தில். பழமை வாய்ந்த இந்நகரில் சிறுமிகள் பாடசாலைகளுக்கு செல்வதை மர்ம நபர்கள் சிலர் விரும்பவில்லை. இதனை தடுக்கும் நோக்கத்தில் குறித்த சிறுமிகளுக்குவிஷம் வைத்துள்ளனர். பெண்கள் பயிலும் பாடசாலைகள் மூடப்பட வேண்டும் என சிலர் விரும்புவது கண்டறியப்பட்டுள்ளதாகவும். இருப்பினும் விஷம் வைக்கப்பட்டது […]