# Tags

நெல் பயிரிட்டு முழு ஆசியாவுக்கும் உணவளித்தோம் -முன்னாள் ஜனாதிபதி

இலங்கையில் நெல் பயிரிடப்பட்டு முழு ஆசியாவுக்கும் உணவளிக்கப்பட்டது என முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா குமாரதுங்க குறிப்பிட்டார். ஆனால் இன்றைய நிலவரப்படி உண்பதற்குக் கொஞ்சம் கூட சோறு இல்லாமல் மக்கள் மண்டியிடுகிறார்கள். களனியில் நடைபெற்ற புதிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ் மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு

யாழ் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஆறு மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. யாழ் மாநகர சபையின் 2023 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (21) மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட்டால் இரண்டாவது தடவையாக சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போது வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 16 வாக்குகளும் எதிராக 22 வாக்குகளும் பதிவாகின. 45 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் யாழ் மாநகர சபையில் ஒருவர் உயிரிழந்த நிலையில் இலங்கை தமிழரசுக் கட்சி […]