COVID-19 தொற்றின் பின்னர் நாட்டை வந்தடைந்த முதலாவது சீன சுற்றுலா பயணிகள் குழு
COVID-19 வைரஸ் தொற்றுக்கு பின்னர் முதல்தடவையாக சீனச் சுற்றுலாப் பயணிகள் சிலரை ஏற்றிய ஶ்ரீ லங்கன் விமான சேவையின் விமானமொன்று நேற்றிரவு(01) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. குறித்த சுற்றுலாப் பயணிகள் சீனாவின் Quanzhou நகரிலிருந்து நாட்டை வந்தடைந்துள்ளனர். குறித்த சுற்றுலாப் பயணிகளை வரவேற்பதற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, வௌிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய மற்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் உள்ளிட்ட தரப்பினர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்தனர்.