3ஆவது டெஸ்ட்: அவுஸ்திரேலிய அணி 9 விக்கட்டுக்களால் வெற்றி !
இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 9 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 109 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்ததோடு, அவுஸ்திரேலிய அணி அதன் முதலாவது இன்னிங்ஸிற்காக 197 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதனையடுத்து, 88 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்த இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸூம்163 ஓட்டங்களுக்குள் நிறைவுக்கு வந்தது. 45 வருடங்களுக்கு பின்னர் இந்திய அணி இரு இன்னிங்ஸூகளிலும் 200 ஓட்டங்களுக்கு குறைவாக […]