# Tags

18 வயதுக்குட்பட்டவர்கள் குறித்து TikTok எடுத்துள்ள முக்கிய தீர்மானம்

18 வயதுக்குட்பட்ட TikTok உறுப்பினர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 18 வயதுக்குட்பட்ட உறுப்பினர்கள் ஒரு நாளைக்கு 60 நிமிடங்கள் மட்டுமே TikTok கை பயன்படுத்த முடியும் அடுத்த சில வாரங்களில் புதிய முறை அறிமுகப்படுத்தப்படும் என்று TikTok தெரிவித்துள்ளது.

அரச சாதனங்களில் TikTok செயலிக்கு தடை

அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அனைத்து சாதனங்களிலிருந்தும் சீன செயலியான TikTok செயலியை தடை செய்வதற்கு கனடா தீர்மானித்துள்ளது. TikTok செயலியானது தனியுரிமை மற்றும் பாதுகாப்பிற்கு ஏற்றுக்கொள்ள முடியாத அளவிலான ஆபத்தை ஏற்படுத்துவதாக கனேடிய அரசின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். கனடாவின் இந்த தீர்மானத்தால் தமது நிறுவனம் ஏமாற்றம் அடைந்துள்ளதாக TikTok செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். ஐரோப்பிய ஆணைக்குழுவினால் இதேபோன்ற தடை அறிவிக்கப்பட்டு சில நாட்களுக்குப் பின்னர் கனடா இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.