பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

Date:

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் நவம்பர் 22 முதல் ஜனவரி 8 வரை நடக்கவுள்ளது. ஒவ்வொரு 2 டெஸ்ட் போட்டிக்கும் இடையில் போதுமான இடைவெளி கொடுக்கப்பட்டுள்ளதால், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எந்த அணியாலும் கம்பேக் கொடுக்க முடியும்.

இதேபோல் ஆஸ்திரேலியா மண்ணில் கடந்த முறை விளையாடிய 2 முறையும் இந்திய அணி கோப்பையுடன் திரும்பியுள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேலாக பார்டர் கவாஸ்கர் கோப்பை வெல்ல முடியாமல் ஆஸ்திரேலியா அணி திண்டாடி வருகிறது. சொந்த மண்ணிலேயே தொடர்ச்சியக 2 முறை இந்திய அணியுடன் தோல்வியடைந்திருப்பதால், ஆஸ்திரேலியா அணி பழிதீர்க்க தீவிரமாக உள்ளது.

இந்த நிலையில் பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

இந்திய அணிக்கு எதிரான பார்டர் -கவாஸ்கர் கோப்பையை ஆஸ்திரேலியா வென்று நீண்ட காலமாகிவிட்டது. தற்போது அந்த நிலையை மாற்றியமைக்கக் கூடிய நேரம் வந்துவிட்டது என நினைக்கிறேன். எதிர்வரும் டெஸ்ட் போட்டிகள் இரு அணிகளுக்கும் சவால் நிறைந்ததாக இருக்கும். இரு அணிகளும் வெற்றிபெற சம வாய்ப்புள்ளதாக கருதுகிறேன். இந்த தொடரில் விளையாட ஆர்வமாக உள்ளேன்.

இந்திய அணியும் எங்களை வீழ்த்தி இருக்கிறார்கள். அதேபோல் நாங்களும் ஏராளமான டெஸ்ட் போட்டிகளில் வென்றுள்ளோம். அதுதான் இம்முறை எங்களுக்கு உதவியாக இருக்கும்.

இவ்வாறு கம்மின்ஸ் கூறியுள்ளார்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...

ரோகித் சர்மாவுக்காக 50 கோடி ரூபாய் ஒதுக்கி வைத்திருக்கும் டெல்லி, லக்னோ

இந்திய டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் அணிகளின் கேப்டனான ரோகித் சர்மா மும்பை...