அலுவலக நேரத்திற்குப் பிறகு செல்போன்களை ‘சுவிட்ச் ஆப்’ செய்யும் உரிமை

Date:

தொழில் நிறுவனங்களில் வேலை மற்றும் பணியின்போது பயன்படுத்தும் செல்போன்களை பணி முடிந்ததும் ‘சுவிட்ச் ஆப்’ செய்துகொள்ளும் சட்டம் பிரான்ஸ், ஸ்பெயின், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் நடைமுறையில் உள்ளது.

இதேபோல ஆஸ்திரேலிய நாட்டிலும் அலுவலக நேரத்திற்குப் பிறகு செல்போன்களை ‘சுவிட்ச் ஆப்’ செய்யும் உரிமை விரைவில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

வேலை நேரத்திற்குப்பின் நிறுவனங்களில் இருந்து வரும் அழைப்புகள், குறுஞ்செய்திகள் ஆகியவற்றை புறக்கணிக்கும் உரிமையை தொழிலாளர்களுக்கு அளிக்கும் புதிய சட்டத்தை ஆஸ்திரேலிய அரசு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

இந்த மசோதா ஒரு வாரத்திற்குள் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த சட்டம் ஆஸ்திரேலிய பசுமைக் கட்சி மற்றும் சுயேச்சை செனட்டர்களுடன் விரைவில் நிறைவேற்றப்படுகிறது.

ஏற்கனவே பிரான்ஸ், ஸ்பெயின், பெல்ஜியத்தில் இந்த புதிய சட்டம் அமலான நிலையில் உலகில் பல்வேறு நாடுகளும் இந்த சட்டத்தை அமல்படுத்துவது குறித்து பரிசீலனை செய்து வருகின்றன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐபிஎல் 2024: 2-வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ராஜஸ்தான்

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்...

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட...

நடப்பு ஐபிஎல் தொடரில் 1,125 சிக்சர்கள்: கடந்த ஆண்டு சாதனை முறியடிப்பு

ஐ.பி.எல் தொடரின் ஒவ்வொரு சீசனிலும் சிக்சர்களின் எண்ணிக்கை உயர்ந்தவாறு இருக்கிறது. தற்போது...