யாழில் அதிகரித்துள்ள வன்முறை சம்பவங்கள்!

Date:

யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் அத்தியட்கர் பிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில் இவ்வருடம் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் கடந்த வருடத்தை விட இவ்வருடம் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வருடம் ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்பில் யாழ்ப்பாணம், சுன்னாகம், மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 6 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதோடு, சிறுவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 53 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருந்தன.

எனினும் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் கடந்த மே மாத இறுதி வரை பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 4 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, கடந்த 5 மாதங்களில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 53 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

பொலிஸ் நிலையங்களில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் முறையே,

யாழ்ப்பாணம் – 06
சுன்னாகம் – 14
மானிப்பாய் – 04
கோப்பாய் – 06
கொடிகாமம் – 03
சாவகச்சேரி – 06
வட்டுக்கோட்டை – 05
ஊர்காவற்துறை – 07

ஆகிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மேற்படி முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

18 வயதுக்குட்பட்டோரை அச்சுறுத்தல், துன்புறுத்துதல், காயப்படுத்துதல், மிரட்டுதல், சித்திரவதைக்கு உட்படுத்துதல், உள ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தல், பாலியல் ரீதியாக துன்புறுத்தல், பாலியல் ரீதியான தொல்லை போன்ற வன்முறை சம்பவங்கள் வீடுகள், பாடசாலைகள், தனியார் கல்வி நிலையங்களில் ஏற்படுத்தப்பட்டமை தொடர்பிலாக 53 முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுடன் தொடர்புடையோர் உரிய முறையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு பலர் நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக சிறுவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுமிடத்து குறித்த முறைப்பாடு தொடர்பில் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்ற சட்டநியதியின் அடிப்படையில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் அனைத்திற்கும் உரிய சட்டகோவைக்கு அமைய நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் முதல் அரையாண்டு பகுதிக்குள் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்த நிலை காணப்படுகின்றது.

மேலும், யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் வழிகாட்டுதலின்படி யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பெண்கள் பாடசாலைகளில் வகுப்பு ஆசிரியர்கள் அனைத்து மாணவர்களின் பெற்றோர்களின் தொலைபேசி இலக்கங்களை உள்ளடக்கி whatsapp குழுவினை உருவாக்கி, மாணவர்களின் வரவு மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் குறித்த குழுவில் பகிர்ந்து மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் ஏனைய எதிர விடயங்களை உறுதிப்படுத்தும் வேலை திட்டம் ஒன்றினை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...