வெற்றியை நெருங்கி வந்து தோற்றது ஏமாற்றம் அளிக்கிறது: நியூசிலாந்து கேப்டன் ஆதங்கம்

Date:

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று தர்மசாலாவில் நடந்த 27-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்தை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா திரில் வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 49.2 ஓவரில் 388 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. டிரெவிஸ் ஹெட் (109) சதமடித்தார்.

நியூசிலாந்து சார்பில் போல்ட், பிலிப்ஸ் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.

அடுத்து ஆடிய நியூசிலாந்து அணி 383 ரன்கள் எடுத்து 5 ரன் வித்தியாசத்தில் தோற்றது. ரச்சின் ரவீந்திரா (116 ரன்) சதம் அடித்தார். கடைசி கட்டத்தில் ஜிம்மி நீஷம் (58 ரன்) வெற்றிக்காக போராடினார். ஆனால் அவர் ரன் அவுட்டானது பின்னடைவை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தோல்வி குறித்து நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் கூறியதாவது:

இது கிரிக்கெட்டின் அருமையான விளையாட்டாக இருந்தது. வெற்றிக்கு இவ்வளவு நெருக்கமாக வந்து தோற்றது ஏமாற்றம் அளிக்கிறது. வெளிப்படையாக மனது வலிக்கிறது. ஆஸ்திரேலியா அருமையாக விளையாடி தொடக்கம் முதலே எங்களை பின்னுக்கு தள்ளினார்கள். முக்கியமான நேரத்தில் பிலிப்ஸ் அற்புதமாக பந்துவீசினார். 10 ஓவர் வீசி 37 ரன் விட்டுக் கொடுத்து, 3 விக்கெட்டை கைப்பற்றி கொடுத்தார்.

ஒரு முனையில் இருந்து அவரது பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. 400 ரன்னுக்கு அருகே நீங்கள் சேசிங் செய்யும்போது சரியான ஆட்டத்தை விளையாட வேண்டும்.

யங்-கான்வே நல்ல தொடக்கம் அளித்தனர். ரச்சின் ஒரு அசாதாரண விளையாட்டை ஆடினார். இது சிறந்த ஆட்டங்களில் ஒன்று. தரம்சாலா விளையாடுவதற்கு அருமையான இடம் என தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

முதல் 7இல் வெறும் 1.. அடுத்த 7இல் 6.. கம்பேக்கில் மேஜிக் நிகழ்த்திய ஆர்சிபி.. வேறு யாரும் செய்யாத 2 சாதனை

உச்சக்கட்டத்தை தொட்டுள்ள ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 68வது லீக்...

கங்குவா தீபாவளிக்கு வெளியாகிறதா?

தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' என்ற படத்தில்...