கடைசி பந்து வரை நீடித்த பரபரப்பான ஆட்டம்… பஞ்சாபிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வி

Date:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. கடைசி பந்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற 3 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தபோது, அந்த அணியின் சிக்கந்தர் ராசா 3 ரன்கள் எடுத்து பஞ்சாபை வெற்றி பெறச் செய்தார். கடைசி பந்து வரை பரபரப்பாக நடந்த இந்த ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் – டெவோன் கான்வே ஆகியோர் விளையாடி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.

இருவரும் முதல் விக்கெட்டிற்கு 86 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 31 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷிவம் துபே 2 சிக்சர் 1 பவுண்டரியுடன் 28 ரன்கள் எடுத்து வெளியேறினார். மொயின் அலி 10 ரன்களும், ஜடேஜா 12 ரன்களும் எடுத்தனர்.

விக்கெட்டுகள் ஒருபக்கம் விழுந்தாலும் தொடக்க வீரர் டெவோன் கான்வே சிறப்பாக விளையாடி கடைசி வரை களத்தில் நின்றார். 1 சிக்சர் மற்றும் 16 பவுண்டரிகளை விளாசிய கான்வே 92 ரன்கள் எடுத்து அணியின் ரன் குவிப்புக்கு காரணமாக இருந்தார். கடைசி நேரத்தில் தோனி களத்தில் இறங்கினாலும், சாம் கரன் வீசிய 20 ஓவரின் கடைசி 2 பந்துகளையும் சிக்சருக்கு அனுப்பி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த சென்னை அணி 200 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கினர். தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் 24 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து சிறந்த தொடக்கத்தை கொடுத்தார்.

கேப்டன் ஷிகர் தவான் 28ரன்களும் அதர்வா டைடே 13 ரன்களும் எடுத்தனர். லியாம் லிவிங்ஸ்டோன் 4 சிக்சர்களுடன் 24 பந்துகளில் அதிரடியாக 40 ரன்கள் சேர்த்தார். சாம் கரன் 29 ரன்களும், ஜிதேஷ் சர்மா 10 பந்தில் 21 ரன்னும் எடுத்தனர். கடைசி ஓவரின் கடைசி பந்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சிக்கந்தர் ராசா 3 ரன்கள் எடுதது அணியை வெற்றி பெற வைத்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

முதல் 7இல் வெறும் 1.. அடுத்த 7இல் 6.. கம்பேக்கில் மேஜிக் நிகழ்த்திய ஆர்சிபி.. வேறு யாரும் செய்யாத 2 சாதனை

உச்சக்கட்டத்தை தொட்டுள்ள ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 68வது லீக்...

கங்குவா தீபாவளிக்கு வெளியாகிறதா?

தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' என்ற படத்தில்...