பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி

Date:

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட T20 தொடர் ஷார்ஜாவில் நடைபெற்று வருகின்றது.

இதில் முதலாவது போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்று அசத்தியது.

இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2வது போட்டி நேற்று நடைபெற்றது.

இதில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி கடந்த ஆட்டத்தை போல் ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் ஓட்டங்களை எடுக்க தடுமாறியது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சைம் அயூப் 0 ஓட்டம் முகமது ஹாரிஸ் 15 ஓட்டம், அடுத்து வந்த ஷாபிக் 0 ஓட்டத்திலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

இதையடுத்து களம் இறங்கிய இமாத் வாசிம் மட்டும் நிலைத்து நின்று விளையாடி அரைசதம் அடித்தார். இமாத் வாசிம் 64 ஓட்டம், ஷதாப் கான் 32 ஓட்டம் எடுத்தனர். இதனால் அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 130 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

இதையடுத்து 133 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி மட்டுமின்றி தொடரையும் கைப்பற்றலாம் என்ற நிலையில் ஆப்கானிஸ்தான் களம் புகுந்தது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரஹ்மத்துல்லா குர்பாஸ் 44 ஓட்டம், உஸ்மான் கானி 7 ஓட்டம், அடுத்து வந்த இப்ராகிம் ஜட்ரான் 38 ஓட்டம் எடுத்த நிலையில் அவுட் ஆகினர்.

இறுதியில் அந்த அணி 19.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 133 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என ஆப்கானிஸ்தான் அணி கைப்பற்றியது. இவ்விரு அணிகள் இடையிலான 3வது T20 போட்டி இன்று இரவு நடைபெறுகின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐபிஎல் 2024: 2-வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ராஜஸ்தான்

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்...

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட...

நடப்பு ஐபிஎல் தொடரில் 1,125 சிக்சர்கள்: கடந்த ஆண்டு சாதனை முறியடிப்பு

ஐ.பி.எல் தொடரின் ஒவ்வொரு சீசனிலும் சிக்சர்களின் எண்ணிக்கை உயர்ந்தவாறு இருக்கிறது. தற்போது...