நைஜர் நாட்டின் ஜனாதிபதி மீது தேசத்துரோக வழக்கு

Date:

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் ஜனாதிபதி முகமது பாசுமுக்கு எதிராக திரும்பிய இராணுவம் அவரை சிறைபிடித்தது.

பின்னர் அவரை பதவி நீக்கம் செய்து இராணுவ ஆட்சி கொண்டு வரப்பட்டதாக அவர்கள் அறிவித்தனர்.

இதற்கு ஐ.நா ஆப்பிரிக்க நாடுகளின் கூட்டமைப்பு போன்றவை எதிர்ப்பு தெரிவித்தன.

இந்தநிலையில் முன்னாள் ஜனாதிபதி முகமது பாசும் மீது தேசத்துரோக வழக்கு மற்றும் தேசிய பாதுகாப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடர போவதாக நைஜர் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதற்காக அவருக்கு எதிரான ஆதாரங்களை அவர்கள் திரட்டி வருகின்றனர். இந்த வழக்குகளில் முகமது பாசும் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் மரண தண்டனை வரை வழங்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....